வருத்தம் பா! சமரசம் செய்த திமுகவிற்காக ஆதவ் அர்ஜுனாவை நீக்கம் செய்வதா? அதிருப்தியை வெளிப்படுத்திய நடிகை!
ADMK Gayatri Rahuram reply to VCK Thirumavalavan Aadhav Arjuna
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தற்போது நடக்கின்ற திமுக ஆட்சி மன்னர் ஆட்சி என்றும், வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் இந்த மன்னர் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றும், பிறப்பால் இன்னொரு முதலமைச்சர் வந்துவிடக் கூடாது என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இதற்கு திமுக தரப்பில் கடுமையான கண்டனங்கள் வலுத்த நிலையில், இன்று முதல் ஆறு மாதம் விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்படுவதாக திருமாளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், "வருத்தம். திமுகவினர் தங்கள் தலைவர்களையோ அல்லது தொண்டர்களையோ ஒருபோதும் வி.சி.கவுக்காக சமரசம் செய்ய மாட்டார்கள்.
சிறையில் அடைக்கப்பட்ட மற்றும் ஊழல் செய்த செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கினர். திமுக அவரை இடைநீக்கம் செய்யவில்லை.
crossorigin="anonymous">
ஆனால், திமுகவிற்கு எதிராகப் பேசியதற்காக, அம்பேத்கர் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டதற்காக விசிக மாநிலப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் ஏன் சமரசம் இடைநீக்கம்? இது தொண்டர்களை ஒடுக்குகிறது அல்லவா? ஜனநாயகம் மற்றும் ஒருவரின் பார்வையை கேட்க வேண்டும். ஜனநாயகத்தை ஒடுக்க முடியாது. திமுக மன்னர் ஆட்சியை இனி அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Gayatri Rahuram reply to VCK Thirumavalavan Aadhav Arjuna