ஒருவேளை இப்படி நடந்தால் என்ன செய்வது...? அஇஅதிமுகவின் பொதுக்குழுக்கு மாற்று ஏற்பாடு... வெளியான பரபரப்பு தகவல்.!
admk general committee meet extra plan
அஇஅதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இன்று, அதிமுகவின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ் சென்று சேர்ந்துள்ளது. மேலும், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டத்தில் வெளிப்பகுதியில் பொதுக்குழுவை நடத்த ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.
இந்த பொதுக்குழுவை முடக்கும் அணைத்து வழிமுறைகளையும் ஓபிஎஸ் தரப்பு மேற்கொண்டு வருகிறது. அதே சமயத்தில், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,
"அந்த பொதுக்குழு கூட்டத்தில் 99 சதவீத தலைமை கழக நிர்வாகிகளும், 99 சதவீத பொதுக்குழு உறுப்பினர்களும், 99 சதவீத கழகத் தொண்டர்களும், இன்றைக்கு ஏகபித்த விருப்பம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒற்றை தலைமை வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். அதனை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்று பரவல் காரணமாக ஏதேனும் தடை வந்தால் மாற்று வழியாக ஆன்லைன் மூலமும் அதிமுக பொதுக்குழுவை நடத்துவதற்கு உண்டான திட்டத்தையும் அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, பொதுக்குழுவை நேரடியாக நடத்தவே திட்டமிட்டுள்ளதாகவும், ஒருவேளை தொற்று பரவல் காரணமாக அரசு அனுமதி வழங்காதபட்சத்தில், ஆன்லைன் பொதுக்குழு என்ற மாற்று திட்டத்தை பயன்படுத்த தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுத்து உள்ளனர் என்று அந்த தகவல் தெரிவிக்கின்றது.
English Summary
admk general committee meet extra plan