#BigBreaking || அதிமுக தலைமை அலுவலக வழக்கின் தீர்ப்பு..! சற்றுமுன் நேரம் குறித்த சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரிய வழக்கு கடந்த 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், "சீல் வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரியையோ, சிவில் நீதிமன்றத்தையோ அணுகலாம் என நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது. 

அதிமுக தலைமை அலுவலகம் இரு தரப்பில் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எந்த நீதிமன்றங்களிலும் வழக்கு நிலுவையில் இல்லை" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

தொடர்ந்து, வீடியோ, புகைப்பட ஆதாரங்களையும் பார்க்க வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு கூறியதால், அதனையும் காவல்துறை தாக்கல் செய்துள்ளது. காவல்துறை பதில் மனுவுக்கு ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்ய ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு திங்கள்கிழமை வரை அவகாசம் விதிக்கப்பட்டது.

மேலும், காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் தீர்ப்பை ஒத்தி வைத்து தற்போது உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் நாளை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. நாளை பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி சதீஷ்குமார் அவர்கள் இந்த உத்தரவை பிறப்பிக்கிறார்.,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK HEAD OFFICE CASE JUDGEMENT DATE JULY


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->