எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு ஆப்பு? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! - Seithipunal
Seithipunal


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆதரவாளா்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் அரசு, தனியார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. கலவரம் காரணமாக அதிமுக அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, பின்னா் நீதிமன்ற உத்தரவின்பேரில் ‘சீல்’ அகற்றப்பட்டது.

இந்த கலவரம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி விசாரணை தொடங்கியுள்ளது.

இதற்கிடையே, அதிமுக தலைமை அலுவலக மோதல் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிமன்றம், வரும் செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 


முன்னதாக, அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி., தொடர்ந்த வழக்கை இன்று விசாரணை செய்த உயர் நீதிமன்றம், அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கை விரைந்து விசாரணை செய்து முடிக்க வேண்டும் என்று, சிபிசிஐடி போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், விசாரணை குறித்து அறிக்கையை வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK head office jcd pirapakar case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->