எடப்பாடி பழனிச்சாமி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்.! - Seithipunal
Seithipunal


அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது தமிழகத்தில் பரபரப்பாக இருக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது. இதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு பிரிவுகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது நடைபெற்று வருகிறது.

தற்போதைய நீதிமன்ற தீர்ப்பின் படி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் இருக்கிறார். நேற்று மு தான் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு தொண்டர்கள் புடைசூழ வந்திருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். விரைவில் உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு விசாரணை வருவதை ஒட்டி இந்த பயணம் திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK interim secretory EPS swamy tharishanam in thirupati today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->