அவன் வீட்டு படுக்கையறையில் பிரியாணி சாப்பிட்ட திமுக அமைச்சர், துணை மேயர்! பதிலடி கொடுக்கும் அதிமுக!  - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கின் குற்றவாளி ஞானசேகரனுக்கும் திமுகவிற்கு தொடர்பு இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் குற்றம் சாட்டிய நிலையில், இதற்க்கு திமுக அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், எடப்பாடி பழனிச்சாமி பொய் சொல்வதாகவும், அருவருப்பு அரசியல் செய்கிற சேடிஸ்ட் மனநிலையையை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் ரகுபதிக்கு அதிமுக ஐடி விங்க் தரப்பில் கடும் கணடனம் தெரிவித்து விடுத்துள்ள செய்திக்குறிப்ப்பில், "அஇஅதிமுக தொண்டர்களின் வியர்வையாலும் ரத்தத்தாலும் அரசியல் வாழ்வு பெற்ற ரகுபதி, இந்த இயக்கத்தைப் பற்றியோ, பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் பற்றியோ எந்த அருகதையும் இல்லை.

ஸ்டாலின் மாடல் அரசின் கையாலாகாத்தனத்தை உயர்நீதிமன்றமே தோலுரித்த பிறகும், உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ள வெட்கமாக இல்லையா அமைச்சர் ரகுபதி?

2018ல் மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சியில் துப்பாக்கியும் கையுமாக கைது செய்யப்பட்ட இந்த ஞானசேகரனுக்கு இன்று அரசியல் அடைக்கலம் கொடுத்திருப்பது உங்கள் திமுக தானே?

திமுக பவள விழாவில் பல்லிளித்து நிற்பான்...

அவன் வீட்டு படுக்கையறையில் அமர்ந்து அமைச்சர் மா.சுப்ரமணியன், துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் பிரியாணி சாப்பிடுவார்கள்...

ஆனால், அவனை திமுக காரன் இல்லை என்று ரகுபதி சொல்வார் என்றால், அதை நாளை பிறக்கப்போகும் பிள்ளை கூட நம்பாது!

நீங்கள் எப்படி திசைதிருப்ப நினைத்தாலும் எங்கள் கேள்வி நேரானது- #யார்_அந்த_SIR ?" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK IT Wing reply to DMK Minister Rahupathy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->