தமிழக அரசை நம்பி பலனில்லை! களத்தில் இறங்குங்கள்... நமக்கு நாமே!  - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை இருந்தும் பல நிறுவனங்கள் ஊழியர்களை நேரடியாக பணியில் ஈடுபடுத்துவது இரக்கமற்ற செயலாகும்.

நிறுவனங்கள் பக்கம் நின்றால் தான் நிதி கிடைக்கும் என்ற நிலைப்பாடுடன் அரசு உள்ளதா?

அத்தியாவசிய பொருட்கள்,காய்கறிகள் உள்ளிட்டவையின் விலை பன்மடங்கு உயர்ந்தும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

மழையை தன் சுயவிளம்பரத்திற்கான ஆயுதமாக கையில் எடுத்துள்ளார் முதல்வரின் மகன் துணை முதல்வர் உதயநிதி!

நீர்வழிபாதைகள், ஏரிகள் தூர்வாரபடவில்லை.

முட்டுக்காடு முகத்துவாரத்தில் முறையான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. சில தினங்களுக்கு முன்னர் தான் பல இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் மாநகராட்சி சார்பாக தொடங்கப்பட்டது!

எனவே இந்த அரசை நம்பி பலனில்லை!

நாம் அனைவரும் நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் தற்காத்து கொண்டால் தான் உண்டு!

அச்சவுணர்வுடன் என்ன செய்வதென்று அறியாத மனநிலையில் இருக்கும் மக்கள்!

மதம்,மொழி,இனம்,சாதி கடந்து மனிதநேயத்தோடு இந்த மழையில் மற்றவர்களுக்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்திடுவோம்" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Jayakumar Chennai Rains DMK MK Stalin Udhay


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->