அவர்களை ரவுடிகளாக, சாதி வெறியர்களாக மாற்றியது தான் ஸ்டாலின் அரசின் மாபெரும் சாதனை! அதிமுக தரப்பில் கடும் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "துணை முதல்வர் உதயநிதியின் நண்பர்! குடும்ப ஆட்சியை எந்நாளும் கொண்டாடும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

தற்போது பள்ளிகூடங்களில் மாணவர்கள் ஆசிரியர்களை அடிப்பதும், வகுப்பறைகளில் செல்போன் பயன்படுத்துவதும், பள்ளியில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதும், சாதிய மோதல்களில் ஈடுபடுவதும் என மாணவர்களை ரவுடிகளாக சாதி வெறியர்களாக மாற்றியுள்ளது தான் ஸ்டாலின் அரசின் மாபெரும் சாதனை!

இவரை போன்ற அமைச்சர் தொடர்ந்து நீடித்தால் கல்வியில் வடமாநிலங்களை விட நாம் பின்தங்கும் நிலை நிச்சயம் உருவாகும்!

இன்று அரியலூர் மாவட்டம்-விக்கிரமங்கலத்தில் மாணவர்கள் இடையே உருவான சாதியவாத மோதல்கள் உள்ளபடியே நம்மை நொறுங்கி போகச் செய்கின்றன!

தயவு செய்து அன்பில் மகேஷ் அவர்களை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவித்து உதயநிதியின் உதவியாளராக நியமனம் செய்யுமாறு ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்! அவருக்கும் அதுவே விருப்பம்" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Jayakumar Condemn to DMK Udhay Anbil Mahesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->