பொன்முடி மீது சேற்றைவாரி இறைத்த மக்கள்! பழிவாங்க நினைத்தால் அதிமுக வேடிக்கை பார்க்காது - ஜெயக்குமார் ஆவேசம்!
ADMK Jayakumar say about DMK Ponmudi Vilupuram incident
விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு பகுதியில் திருச்சிராப்பள்ளி-சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் வனத்துறை அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது அமைச்சர் பொன்முடி களத்தில் இறங்கி வெள்ள பாதிப்புகளை மதிப்பிடாமல் வாகனத்திற்குள் இருந்து பேசியதாக கூறி சிலர் கற்களை வீசியதாகவும், அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசியதாகவும் தெரியவந்துள்ளது. அவருடன் வந்த அவரின் மகன் மீதும் சேற்றை வீசியதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து தெரிவிக்கையில், "காரைவிட்டு இறங்காமல் மக்களிடம் பேசியதால் மக்கள் சேற்றைவாரி இறைத்துள்ளனர்.
விழுப்புரம் - இருவேலப்பட்டு மக்கள் எந்தவித துன்புறுத்தலோ, அதிகார துஷ்பிரயோகமோ நிகழக்கூடாது. ஒரு வேளை அப்படி ஒரு அராஜகத்தை திமுக அரசு முன்னெடுத்தால் அதிமுக வேடிக்கை பார்க்காது" என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஐடி விங்க் பக்கத்தில், "ஆட்சி அதிகாரம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, சொல்லொண்ணா துயருக்கு ஆளாக்கிய கொடுங்கோலர்களுக்கு மக்கள் எனும் எஜமானர்கள் தண்டனையை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ADMK Jayakumar say about DMK Ponmudi Vilupuram incident