நெருப்பில்லா அடுப்பு! பருப்பில்லா பானை! செருப்போடு சிரிப்பு! ஆகா சாரே! எந்தா படப்பிடிப்பு!!
ADMK Jayakumar Say About DMK Udhay Pongal
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் நமது தமிழ்நாடு மாநிலத்தில் ஒட்டுமொத்த மக்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.
தமிழக முதலமைச்சர், தமிழக ஆளுநர், பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், திரை பிரபலங்கள் தங்களது பொங்கல் வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
அனைத்து மதத்தினரும் கொண்டாடும் வகையில், சமத்துவ பொங்கல் என்ற பெயரில் முதலமைச்சர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஷூ அணிந்து கொண்டு, பற்ற வைக்காத அடுப்பில், வெறும் பானையில் கரண்டியை வைத்து கிண்டுவது போல இருக்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில், இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "நெருப்பில்லா அடுப்பு! பருப்பில்லா பானை! செருப்போடு சிரிப்பு! ஆகா சாரே! எந்தா படப்பிடிப்பு" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Jayakumar Say About DMK Udhay Pongal