மகன் கையில் தமிழ்நாட்டை கொடுத்து விட்டு, அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்த பொம்மை முதலமைச்சர் - ஜெயக்குமார் விளாசல்!
ADMK Jayakumar say SaveTNFishermen
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இனவெறி கொண்ட இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் படகு மீது மோதி நடுக்கடலில் மீனவர்களை தத்தளிக்க விட்டுள்ளனர்!
மானமில்லாமல் மன்னராட்சிப் போல் மகன் கையில் தமிழ்நாட்டை விளையாட்டுப் பொருளாக கொடுத்து விட்டு அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்துள்ள பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மீனவர் வேதனை புரியவில்லையா? தெரியவில்லையா?
பாஜக அரசு தனக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைகளுக்கும் சம்பந்தம் இல்லாதது போலவும் ஆந்திரா,பிகார்,குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் மட்டும் தான் இந்தியா எனவும் எண்ணி ஆட்சி செய்கிறது.
கடந்த பத்தாண்டில் இல்லாத அளவிற்கு 2024-ஆம் ஆண்டில் அதிகளவு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர்.கடல் நடுவே மீனவர்களுக்கு கடும் துன்புறுத்தல்கள் தொடர்கதையாகி உள்ளது.
இனியும் பாஜக-திமுக அரசுகள் மெளனம் சாதிப்பது மீனவர்களுக்கு செய்யும் பெரும் துரோகம் என்று ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Jayakumar say SaveTNFishermen