#BigBreaking || அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க இது கட்டாயம் - சற்றுமுன் வெளியான அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


அதிமுகவின் பொதுக்குழுவில் பங்கேற்க ஆதார் அட்டை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்செல்வம், எடப்பாடி கே பழனிசாமி தனித்தனியாக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓபிஎஸ் தரப்பில் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அதேசமயத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு உண்டான வேலைகளை, ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், நாளை நடைபெற உள்ள அதிமுகவின் பொதுக்குழுவில் பங்கேற்க ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை நடைபெற உள்ள கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளே செல்ல அழைப்பிதழுடன், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டு வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை இல்லை என்றால், வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து பொதுக்குழுவில் பங்கேற்கலாம் என்று அந்த தகவல் தெரிவிக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK meet issue some info ops eps


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->