திடீர் திருப்பமா? அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறிய முக்கிய புள்ளி.! காரணம் என்ன? பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக தலைமைகள் ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுகவின் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 - வியாழக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடர்பாக இன்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் உடன் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். 

இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் வெளியேறினார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன் வெளியேறியுள்ளார்.

வெளியான முதல்கட்ட தகவலின்படி, இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தொலைபேசிக்கு அனுமதி இல்லை என்று அறிவுறுத்தியதன் காரணமாக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் வெளியேறியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk meeting maitreyan outside


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->