என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை - அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்த காரணத்தால், அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ தளவாய் சுந்தரத்தின் பதவி தற்காலிகமாக பறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரபல தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு தளவாய் சுந்தரம் அளித்த பேட்டியில், "என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை.

எம்எல்ஏ என்ற முறையில் ஆர்எஸ்எஸ் விடுத்த அழைப்பை ஏற்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மற்றபடி அதில் உள்நோக்கம் ஏதுமில்லை.

இந்த அறிவிப்பு எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நான் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கொள்கையை மீறி அல்லது கூட்டணி தொடர்பாகவோ நான் எந்த விதமான செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை. 

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி என்பதாலும், எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பின் காரணமாகவும் மட்டுமே நான் அதில் கலந்து கொண்டு, அந்த பேரணியை தொடங்கி வைத்தேன். இதற்குப் பின்னணியில் வேறு எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MLA Thalavai Sundram Press meet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->