அதிமுக எம்எல்ஏ-வின் பதவி பறிப்பு - எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு! அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான தளவாய் சுந்தரம், அப்பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்துவரும் தளவாய் சுந்தரம், கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவின் பிரபலமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், கட்சியின் கோட்பாடுகள், சட்டதிட்டங்களுக்கு முரணாக செயல்பட்டதால், அவரை பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இது குறித்து வெளியான தகவலின் படி, பாஜக உடன் எந்த காலத்திலும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொன்ன, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, RSS ஊர்வலத்தை தொடங்கி வைத்த கன்னியாகுமரி தொகுதி அதிமுக MLA தளவாய் சுந்தரம் மீது நடவடிக்கை எடுப்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவரின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MLA Thalavai Sundram Suspended EPS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->