தமிழக பட்ஜெட் 2022 - 2023.. அதிமுக போட்ட அசத்தல் பிளான்.!!
ADMK new plan for Budget 2022
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை தாக்கல் செய்கிறார். முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முழுமையாக பட்ஜெட் இதுவாகும். இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இதனால் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிக்கும்போது, எம்எல்ஏக்கள் இருக்கைகளும் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் லேப்டாப்பில் பட்ஜெட் விவரங்கள் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலை எல்லாரும் பார்க்கும் வகையில் சட்டப்பேரவையில் பெரிய திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் மகளிர் உரிமைத்தொகை, மாதந்தோறும் மின் கட்டணம் உள்ளிட்ட திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று கூடும் சட்டமன்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, எஸ் பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு, பால் பொருட்கள் விலை உயர்வு, நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப அதிமுக முடிவு செய்துள்ளது.
English Summary
ADMK new plan for Budget 2022