ஒற்றை தலைமை., ஒரே வார்த்தையில் முடித்த ஓபிஎஸ்.!  - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த இரு தினங்களாக அதிமுகவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தெரிவிக்கையில், 

"ஒற்றைத் தலைமை என்ற பேச்சு எழுந்தது ஏன் என்று எனக்கே தெரியவில்லை. எந்த அதிகார ஆசையும் எனக்கு இல்லை. ஒற்றை தலைமை வேண்டும் என்ற புதிய பிரச்சினையை உருவாக்கியவர் அதிமுக நிர்வாகி மூர்த்தி.  

எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சினை தேவையா? நானோ, எடப்பாடி பழனிசாமியோ ஒற்றை தலைமை குறித்து பேசியது இல்லை. பொதுச்செயலாளர் என ஜெயலலிதாவிற்கு கொடுத்த பதவியில் வேறு யாரும் வரக்கூடாது.

ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும். 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவின் முடிவுக்கு ஈபிஎஸ் உடன்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமியுடன் எப்போதும் அமர்ந்து பேச தயாராக உள்ளேன். இருவரும் இணைந்தபோது எந்தப் பதவியையும் நான் கேட்டதில்லை.

ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்த முடியாது. சசிகலா விவகாரத்தில் தலைமை நிர்வாகிகளே முடிவு செய்வார்கள். தொண்டர்களின் மனதில் குழப்பத்தை உருவாக்கக் கூடாது என்பது எனது நோக்கம்.  

நான் தொண்டர்களுக்காகவே கட்சியில் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தேன். அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை தேவையில்லை. ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என முடிவு செய்திருந்தோம். மீண்டும் ஒற்றை தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்.

என்னையும், தொண்டர்களையும் பிரிக்க முடியாது. துணை முதல்வர் என்பது அதிகாரமற்ற பதவி. பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.

அதிமுகவில் தொண்டர்களால் தேர்தல் மூலமாகவே பொதுச்செயலாளரை உருவாக்க முடியும் என்பது கட்சி விதி.  தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளால் பொதுச்செயலாளரை உருவாக்க முடியாது என்றார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச்செயலாளர் என்ற பதவி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது.

டிடிவி தினகரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அரசை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியும், நானும் இணைந்தோம். 2016ல் அதிமுக ஆட்சி பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் அரசை காப்பாற்ற வாக்களித்தோம்" என்று ஓபிஎஸ்  தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk OPannerselvam EdappadiPalanisamy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->