#BigBreaking || அதிமுக ஒற்றை தலைமை யார்? சற்றுமுன் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி.!
ADMK OPannerselvam press meet for one head
அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனால், கடந்த இரு தினங்களாக அதிமுகவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், வைத்திலிங்கம், செம்மலை, பொன்னையன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.பி.உதயக்குமார், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை நிறைவுபெற்றபின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், வைகைச்செல்வன் ஆகியோர் தெரிவிக்கையில், "ஒற்றை தலைமை குறித்து கட்சி தான் முடிவெடுக்கும். அதிமுகவில் எந்த பிளவும் இல்லை, ஓபிஎஸ்- ஈபிஎஸ் நகமும் சதையும் போல் உள்ளனர். திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும்" என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தெரிவிக்கையில்,
"அதிமுகவில் தொண்டர்களால் தேர்தல் மூலமாகவே பொதுச்செயலாளரை உருவாக்க முடியும் என்பது கட்சி விதி. தனிப்பட்ட முறையில் நிர்வாகிகளால் பொதுச்செயலாளரை உருவாக்க முடியாது என்றார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச்செயலாளர் என்ற பதவி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது.
டிடிவி தினகரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அரசை காப்பாற்றவே எடப்பாடி பழனிசாமியும், நானும் இணைந்தோம். 2016ல் அதிமுக ஆட்சி பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் அரசை காப்பாற்ற வாக்களித்தோம்" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK OPannerselvam press meet for one head