ஓபிஎஸ் - இபிஎஸ் சண்டை.! நான் விலகிக்கொள்கிறேன்... டிவிட்டில் டிவிஸ்ட் வைத்த அதிமுகவின் முக்கிய புள்ளி.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரின் பதிவில் டுவிட்டர் பதிவில் "நதிக்கரைகள் இருகரைகள் என்ற நம்பிக்கை தகர்ந்ததால் விலகுகிறேன்" என்று மருது அழகுராஜ் விளக்கமளித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயத்தில் எடப்பாடிபழனிசாமி தரப்பிலும் பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அளித்த புகாருக்கு விளக்கம் படிக்கும்படியாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று ஒரு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுகவின் நாளேடான நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ், இபிஎஸ் பிரிவு காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக அவரின் அந்த பதிவு தெரிவிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ops eps issue maruthu azhakuraj twit


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->