#BREAKING || அதிமுக கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது? ஓபிஎஸ்.,க்கு அதிர்ச்சி கொடுத்த பொன்னையன் பரபரப்பு பேட்டி.!
admk ops eps ponnaiyan press meet
இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி கே பழனிசாமி பங்கேற்றார். சுமார் 65 தலைமை கழக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பன்னீர்செல்வத்தை பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கும், அந்த பொருளாளர் பதவியை யாருக்குக் கொடுப்பது என்ற முடிவும் எட்டப்படாத உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகின.
இந்த நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த மூத்த நிர்வாகி பொன்னையன் தெரிவிக்கையில், "அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் சட்டரீதியாக நடைபெற்றது. கூட்டத்தை கூட்ட தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் உள்ளது" என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு என்ன என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பொன்னியின், "பொதுவான கட்சி நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம். இன்று நடைபெற்ற கூட்டம் சட்ட ரீதியாக செல்லும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "வருகின்ற ஜுலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் போட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் முடிவுகள் செய்யப்பட்டது.
ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆகிவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை நிர்வாகிகள் பொறுப்பேற்று கொள்ளுமாறு கோரிக்கை வைத்தனர்" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
admk ops eps ponnaiyan press meet