#BREAKING || முழுஆதரவை தெரிவித்த ஓபிஎஸ்., டெல்லியில் இருந்து வெளியான அதிகாரபூர்வமாக அறிவிப்பு.!
admk ops eps support to precedent election bjp candidate
பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திரௌபதி முர்முக்கு அதிமுகவின் முழு ஆதரவு என்று அறிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரின் வேட்பு மனுவை தலா 50 எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று மதியம் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதற்கிடையே, டெல்லியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உடன் குடியசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு சந்தித்து பேசினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், அதிமுகவின் முழு ஆதரவு குடியசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முக்கு என்று அறிவித்தார்.
எடப்பாடி கே பழனிச்சாமியின் ஆதரவாளர் தம்பிதுரையும் டெல்லியில் உள்ளதால், அந்த தரப்பில் இருந்தும் ஆதரவு உள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
admk ops eps support to precedent election bjp candidate