#BigBreaking | ஓபிஎஸ் அணியில் இருந்து விலகுவதாக 'கோவை செல்வராஜ்' அறிவிப்பு!
ADMK OPS VS EPS Kovai Selvaraj BJP
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
இதில், அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டு, பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களால் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதே சமயத்தில் பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து உள்ள மேல்முறையீட்டு வழக்கு, வருகின்ற ஆறாம் தேதி இறுதி விசாரணை நடைபெற உள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்து அதிமுகவில் பல மாற்றங்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஓ பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்து விலகுவதாக, அவரின் தீவிர ஆதரவாளர் கோவை செல்வராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், அதிமுகவிலிருந்து கோவை செல்வராஜ் வெளியேற உள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் கோவை செல்வராஜ் பாஜகவில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
ADMK OPS VS EPS Kovai Selvaraj BJP