#BigBreaking | ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.,! தட்டி தூக்கியது பாஜகவா? திமுகவா?
ADMk OPS vs EPS Kovai Selvaraj Issue DMK And BJP
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுகவின் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களால் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கட்சியை வழி நடத்தி கொண்டு இருக்கிறார்.
அதே சமயத்தில், பொதுக்குழுவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ஒருபக்கம் தனியாக, தங்கள் தான் அதிமுக என்று செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், அதிமுகவின் பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து உள்ள மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பொறுத்து அதிமுகவில் பல மாற்றங்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர் கோவை செல்வராஜ், ஓபிஎஸ் அணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதிமுக என்ற பெயரில் தங்கள் சுயநலத்துக்காக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சண்டை போட்டு வருகின்றனர். சுயநலத்திற்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க நான் விரும்பவில்லை என்று கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை செல்வராஜன் இந்த திடீர் அறிவிப்பும், அவருடைய கருத்தும், அவர் அதிமுகவிலிருந்து முழுவதும் விலகுவதாகவே தெரிகிறது. மேலும் கோவை செல்வராஜன் இந்த அறிவிப்புக்கு பின்னணியில் திமுக அல்லது பாஜக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர் கருத்து தெரிவிக்கின்றனர்.
திடீரென கோவை செல்வராஜ் ஏற்கனவே திமுக அல்லது பாஜகவில் இணைவதற்கு உண்டான பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், கோவை செல்வராஜன் இந்த அறிவிப்பும், ஓ பன்னீர் செல்வத்தின் அறிக்கையும் அடுத்தடுத்து வெளியாகின. ஓ பன்னீர்செல்வத்தின் அறிக்கையில், கோவை செல்வராஜை மாவட்ட செயலாளர் உள்ளீட்ட அனைத்து பதிவிகளிலிருந்து நீக்குவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
ADMk OPS vs EPS Kovai Selvaraj Issue DMK And BJP