திமுகவினர் வெறுக்கும் அளவுக்கு திமுக ஆட்சி நடக்கிறது - முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர்!
ADMK Rajendrabalaji say about DMK Govt
திமுகவினர் வெறுக்கும் அளவுக்கு திமுக ஆட்சி நடப்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
ராஜபாளையத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் தலைக்கவசம் அணிவதை பற்றி விழிப்புணர்வு இருசக்கர வாகன பயணம் நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தலைமை வகித்த கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, "சிவகாசி அரசு மருத்துவமனையில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட தீக்காய சிகிச்சை பிரிவு செயலற்ற நிலையில் உள்ளது.
இதனால் பட்டாசு விபத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். திமுக அரசு பெறும் கடன் ஆக்கப்பூர்வமான திட்டங்களில் பயன்படுத்தப்படாமல் வீணாகிறது.
அதிமுக அரசு முன்பு ஆரம்பித்த திட்டங்களை திறந்து வைத்து பெயரைப் பதிவுசெய்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் 8 குடிநீர் திட்டங்களில் 5 திட்டங்கள் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
திமுக அரசு கூட்டணியை காப்பாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. திமுகவினரே வெறுக்கும் அளவுக்கு திமுகவின் ஆட்சி இருக்கிறது. ஆனால், 2026ல் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்" என்று தெரிவித்தார்.
English Summary
ADMK Rajendrabalaji say about DMK Govt