முன்னாள் எம்எல்ஏ மகள் மீது, அதிமுக முன்னாள் அமைச்சர் தரப்பும் பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சார்பாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுக துணைச் செயலாளர் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், நேற்று காலை எனது வாட்ஸ்அப் பக்கத்தில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் மற்றும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் R.B.உதயகுமார் குறித்து ஒரு தவறான காணொளி சில சமூக விரோதிகளால் திட்டமிட்டே அவதூறாக அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பரப்பப்பட்டிருந்தது. 

நான் அதுகுறித்து விசாரித்து பார்த்தபொழுது மேற்படி காணொளியானது ஏதோ நியூஸ் 18 தமிழ்நாடு என்ற தனியார் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டதைப்போல் பரப்பப்பட்டிருந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அதுகுறித்து விசாரித்தபொழுது மேற்படி தனியார் தொலைக்காட்சியில் அவ்வாறு எந்தவித காணொளியும் ஒளிபரப்பப்படவில்லை என்று தெரிந்துகொண்ட பிறகு, நான் அதுகுறித்து மேல் விசாரணை செய்தபொழுது, மேற்படி காணொளியானது உசிலம்பட்டியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பாண்டியம்மாள் அவர்களின் மகளான கீதா என்ற உசிலம்பட்டி கீதா என்பவரால் அவருடைய முகநூல் பக்கத்தில் வேண்டுமென்றே அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில், R.B.உதயகுமார் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக போலியாக பகிரப்பட்டுள்ளது.

ஏதோ காணொளியானது சட்டமன்ற எதிர்கட்சித்தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களைப் பற்றி அவதூறாக பேசியதாக போலியாக ஒலிப்பதிவுகளை தயார்செய்து, அந்த போலியான காணொளியை ஏதோ தனியார் தொலைக்காட்சி செய்தி நிறுவனமான நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டதுபோல் திட்டமிட்டு வெளியிட்ட இருவர் மீதும் களங்கம் விளைவிக்கும் வகையில் பரப்பியுள்ளனர். 

உண்மையில் நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததுபோல் உருவாக்கி அதனை மோசடியாக வெளியிட்டும் வேண்டுமென்றே பொய்யான ஆவணங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே கலகம் ஏற்பட வழிவகை செய்யும் வகையிலும் அஇஅதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டுள்ளனர். 

இதனால் R.B.உதயகுமார் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இது கழக தொண்டர்கள் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கீதா என்ற உசிலம்பட்டி கீதா வேண்டுமென்றே குற்ற செயலை பிற நபர்களின் துணையோடு கணினி மற்றும் தொலைபேசி போன்ற அறிவியல் சாதனங்களை பயன்படுத்தி திட்டமிட்டு ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு அவதூறு பரப்பியுள்ளார் என்பதால் இந்த சதி செயல் குறித்து உடனடியாக முறையாக விசாரணை செய்து, கீதா என்ற உசிலம்பட்டி கீதா மற்றும் இதில் சம்மந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK RB Udhayakumar side complaint against Ex MLA Daughter


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->