2 நாட்களில் தவெக மாநாடு!...5 ஆயிரம் கரும்புகளுடன் பிரம்மாண்ட வரவேற்பு வளைவுகள்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இந்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில்  மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று  நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நாகரீகமான முறையில் வரவேண்டும் என்றும்,  குறிப்பாக மாநாட்டுக்கு பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். அவர்களது பாதுகாப்பை மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு தவெக கட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பூமி பூஜைக்கு பந்தல் கால் நாடும் பணி நடைபெற்றது.

மாநாட்டிற்கு, இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் இருந்து தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்சி கொடிகள், சீரியல் விளக்குகள், சாலை நடுவே உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

2 ஆயிரம் வாழை மரங்கள், 5 ஆயிரம் கரும்புகளுடன் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் பணிகள் அனைத்தும் இன்று அல்லது நாளைக்குள் முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 days of tvk onference giant welcome arches with 5 thousand sugar canes


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->