அதிமுகவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... அதிமுகவுடன் தொடர்பில் உள்ளவரின் நிறுவனத்தில் ரெய்டு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் செய்யாதுரை, இவரும் இவருடைய மகனும் இணைந்து நடத்துவரக்கூடிய எஸ்பிகே குழுமம் மற்றும் நிறுவனத்தின் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை மேல் கொண்டு வருகின்றனர்.

செய்யாதுரை அதிமுக பிரமுகர்களுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுகிறது. மேலும் நெடுஞ்சாலை துறையின் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். தற்போது கூட தமிழக அரசின் பல்வேறு ஒப்பந்த பணிகளை இவருடைய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை டி நகர் பகுதியில் உள்ள  எஸ் பி கே கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட வருமானத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு இதே போல் எஸ் பி கே நிறுவனத்தின் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 150 கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்று கோவையில் அதிமுக பிரமுகர் சந்திர சேகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Supporter seiyathurai company IT Raid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->