இலவச மின்சாரத்தை ரத்து செய்யவே ஆதார் எண் இணைப்பு..!! முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின்கட்டணம், பால் விலை ஆகியவற்றின் உயர்வு கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட செயலாளரும் முன்னாள் மின்துறை அமைச்சருமான தங்கமணி தலைமை தாங்கினார். 

அப்போது பேசிய அவர் "பேரூராட்சி பகுதிகள், ஒன்றிய பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகளில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. இது சம்பந்தமாக கட்சி நிர்வாகிகள் அனைவரும் நோட்டீஸ் அடித்து ஒவ்வொரு வீடாக கொண்டு சென்று கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அதிமுக எதற்காக ஆர்ப்பாட்டம் செய்கிறது என்பது மக்களுக்கு தெரிய வரும்.

தமிழகத்தில் வீட்டு வரி, மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆதார் எண் இணைப்பு நடவடிக்கை என்பது 100 யூனிட் இலவசம் மின்சாரத்தை ரத்து செய்யும் முயற்சியாகும். 

குடிசைகளுக்கான மின்சாரம் மற்றும் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை பறிக்கும் முயற்சி நடைபெறுகிறது. அதிமுக மட்டுமே மக்களுக்காக போராடும் இயக்கமாக திகழ்கிறது. நாமக்கல் மாவட்டம் முழுக்க நடைபெறவிருக்கும் போராட்டங்களில் 8 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ள வேண்டும். மீண்டும் சட்டப்படி எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்" என பேசி உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk Thangamani said Aadhaar number link to cancel free electricity


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->