#கூட்டணி தொடருமா? சற்றுமுன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த ஜி.கே. வாசன்! உற்சாகத்தில் அதிமுகவினர்! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். 

இந்த இடைத்தேர்தலில் அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டிடுகின்றன. அமமுக சார்பாக சிவபிரசாந்த்,  தேமுதிக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக பெண் வேட்பாளர் மேனகா போட்டியிடுகின்றனர்.

அதிமுகவின் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக வேட்பாளருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, இன்று நேரில் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆலோசனை செய்தார்.

இந்த ஆலோசனைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த கி.கே.வாசன் தெரிவித்தாவது, "தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இது இந்த இடைத்தேர்தலில் நிச்சயம் மாற்றத்தை உண்டாக்கும்.

பிரதான எதிர்க்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து திமுகவிற்கு பாடம் கற்று தர வேண்டும். மக்கள் நினைக்கும் மாற்றம் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் உறுதியாக ஏற்படும். கடந்த 2019 தேர்தல் முதல் அதிமுக கூட்டணியில் நாங்கள் இருந்து வருகிறோம். இனியும் இந்த கூட்டணி தொடரும்.

மக்களை ஏமாற்றிய அரசாக திமுக அரசு உள்ளதால் மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். நாளுக்கு நாள் திமுகவிற்கு எதிராக ஓட்டு போட மக்கள் தயாராக உள்ளார்கள். இதனை வருகின்ற தேர்தலில் மக்கள் எதிரொலிப்பார்கள்" என்று, ஜி.கே.வாசன் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK TMC GK Vasan meet EPS 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->