பதவியை பறித்த திமுக! இயலாமையின் மொத்த உருவமாய் இருக்கும் திருமாவளவன் - கிழித்தெடுத்தித்த அதிமுக!
ADMK vs VCK DMK Thirumavalavan
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக தெரிவித்துள்ள நிலையில், இது குறித்த திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கடுமையான ஒரு விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.
அதில் ஒரு இடைத்தேர்தலை கூட சந்திக்க முடியாத அளவுக்கு அதிமுக பலவீனம் அடைந்து இருப்பதாக திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திருமாவளவனுக்கு அதிமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கொடுத்துள்ள பதில், சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதில், "நெல்லிக்குப்பம்-னு ஒரே ஓரு நகராட்சி சேர்மன் பதவி திமுக கூட்டணியில் விசிக-விற்கு ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலியே திமுக கூட்டணி யில் விசிக விற்கு போட்டியிட ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியிடம் அந்த நகராட்சி மட்டும் தான்.
விசிக விற்கு ஒதுக்கப்பட்ட அந்த நகராட்சி யில் திமுக தலைமை உத்தரவை மீறி திமுக போட்டி வேட்பாளர் சேர்மனாக நின்று வெற்றி பெற்றிருந்தார்.
இன்று வரை அந்த நகராட்சி தலைவர் பதவி யை தன் கட்சிகாரனுக்கு பெற்று தர திருமாவளவனால் முடியலை. அப்படிபட்ட பலவீனமான தலைமையாய் இருந்து கொண்டு இயலாமையின் மொத்த உருவமாய் இருக்கும் திருமாவளவன், அதிமுக வின் பலம் பலவீனம் குறித்து கருத்து தெரிவிப்பது வேடிக்கையாக இருக்கு" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK vs VCK DMK Thirumavalavan