அமைச்சர் செந்தில் பாலாஜி பார்க்க அனுமதிக்கவில்லை - வழக்கறிஞர் குற்றச்சாட்டு.!
Advocate not allowed to see senthil Balaji
மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையிலும் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் நெஞ்சு வலியால் கதறி அழுததால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு தமிழக துறை அதிகாரிகள் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். மேலும் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்தும் கேட்டறிந்தனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் இளங்கோ பேசியதாவது, அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. காரணம் எதுவும் கூறாமல் அவரை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரிடமும் அதிகாரிகள் எதுவும் கூறவில்லை.
மேலும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகளையும் பின்பற்றப்படவில்லை. எந்த வழக்காக விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Advocate not allowed to see senthil Balaji