பாஜகவுடன் திமுகவுக்கு ரகசிய தொடர்பு... அதிமுக பகிரங்க குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி அதிமுக சார்பில் நேற்று பந்த் நடைபெற்றது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி கடை வீதிகளும் வணிக வளாகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. அதிமுகவின் பந்த அறிவிப்பால் புதுச்சேரி பேருந்து நிலையம் மக்கள் கூட்டம் இன்றி காணப்பட்டது. தனியார் பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை. ஒரு சில அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.

அதிமுக சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டதால் நேற்று அதிகாலை புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் 15 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் திடீரென கைது செய்யப்பட்டனர். இதற்கு காரணம் அதிமுக அறிவித்த பந்த் அழைப்பிற்கு காவல் துறையினர் அனுமதி வழங்கக்கூடாது என திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. 

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் பாஜகவுடன் திமுக ரகசிய தொடர்பில் இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் என்னை கைது செய்ததன் மூலம் வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது. சித்தாந்த ரீதியில் எதிர்காலியாக இருந்தாலும் இருவரும் ரகசிய உறவில் இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே தமிழக அரசியலில் முன்னாள் அமைச்சர்கள் பாஜகவை விமர்சித்து வரும் நிலையில் தற்போது புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK accused DMK secret connection with BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->