நீட் எதிர்ப்பு நாடகம்.. காங்கிரஸை எதிர்த்தா? உச்சநீதிமன்றத்தை எதிர்த்தா? திமுகவை விளாசும் அதிமுக தரப்பு!! - Seithipunal
Seithipunal


திமுக சார்பில் நேற்று நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 50 நாட்களில் 50 லட்சம் பேரிடம் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெறும் பணி திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி, மருத்துவ அணி மற்றும் மாணவர் அணி சார்பில் நடைபெற்று வருகிறது.

இதனை அதிமுக தரப்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கையெழுத்து இயக்கத்தில் அதிமுக பங்கேற்க கோரி அழைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்: நாடாளுமன்ற தேர்தலுக்காக நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் என திமுக நாடகம் நடத்தும் நிலையில் அதிமுக எப்படி பங்கு பெற முடியும்? யாருக்கு எதிராக இந்த கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள் நீட் தேர்வுக்கு முதல் கையெழுத்திட்ட காங்கிரஸை எதிர்த்தா? அல்லது உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தா? என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விளக்க வேண்டும். நீட் தேர்வு என்பது விஷ விதை என்றால் அதனை முதலில் விதைத்தது காங்கிரஸ். ஜல்லிக்கட்டுக்கு பாதகம் செய்ததும், நீட் தேர்வில் பாதகம் செய்ததும் காங்கிரஸ் கட்சி தான். 

நீட் தேர்வு மாணவர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அதனை குறைக்கும் வகையில் எங்கள் ஆட்சியில் 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் அதிமுக எப்போதும் உறுதியாக உள்ளது. நீட் விவகாரத்தில் 38 திமுக எம்பிகளும் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அதுதான் ஆக்கபூர்வமான நடவடிக்கை. நீட் தேர்வை எதிர்த்து இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் திமுக கையெழுத்து வாங்குமா? என்பதை விளக்க வேண்டும் என முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அடுக்கடுக்கான கேள்விகளை திமுகவை நோக்கி வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK ask to DMK holding signature movement against NEET


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->