"எங்கப்பன் குதிருக்குள் இல்லை".!! திமுக அமைச்சரை பங்கம் செய்த அதிமுக!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும், ஆளுநர் மாளிகை முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி "நாங்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் நாங்கள் பெட்ரோல் குண்டு வீசவேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு கிடையாது இது போன்ற சம்பவங்களுக்கு திமுகவோ எங்கள் கூட்டணி கட்சிகளோ பொறுப்பில்லை எங்கேயாவது ஒரு மனநோயாளி பெட்ரோல் குண்டு வீசி விட்டுப் போனால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியுமா? 

ரோட்டில் போற போக்கில் எவனாச்சும் தூக்கிப்போட்டு போனா அதுக்கு என்ன பண்ண முடியும். ஆளுநர் மாளிகைக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது" என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு அதிமுக ஐடி விங் எக்ஸ் பக்கத்தில் "ஆளுநர் மாளிகை முன் நடந்த பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதலுக்கு எங்களுக்கோ எங்கள் கூட்டணி கட்சிகளுக்கோ எந்த சம்மந்தமும் இல்லை" என்று சட்ட அமைச்சர் ரகுபதி பேட்டியில் தெரிவித்திருப்பது, "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்ற பழமொழியை நினைவுப்படுத்துவது ஏனோ?

மேலும், "யாரோ ஒரு மனநோயாளி" தாக்குதல் நடத்தியுள்ளதாக அமைச்சர் அவர்கள் கூறுவது, சட்டத்தின் பணியில் சட்ட அமைச்சரே தலையிட்டு விசாரணையின் திசையை தீர்மானித்து, தன் திசையில் தானே தீர்ப்பு எழுத நினைக்கிறாரோ என்னவோ! இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்தால் தான் உண்மை வெளிவரும்'' என அமைச்சர் ரகுபதி பேசிய வீடியோ பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK criticized DMK minister Raghupathi statement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->