பாவத்த... முதல்வர் அமைத்த மீட்புக் குழுவில் இருந்த அமைச்சர் மீட்கப்பட்டாராம்.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை இன்று காவல் மற்றும் தீயணைப்பு மீட்புத்துறையின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டார். குமரி மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய வளி மண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர்.


இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று பத்திரமாக மீட்கப்பட்டார். கடந்த 3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கிய அமைச்சரை காவல் மற்றும் தீயணைப்பு மீட்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். தமிழக முதல்வர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட வெள்ள நிவாரண மீட்பு குழுவில் இடம் பெற்றிருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டுள்ளார் என்றால் பொது மக்களின் நிலைமை என்ன என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதே போன்று அதிமுக ஐடி விங் மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் தனது சமூகவலைத்தள பக்கத்தில் "பாவத்தை... முதல்வர் அமைத்த மீட்புக் குழுவில் இருந்த அமைச்சர் மீட்கப்பட்டாராம், முதல்ல நீங்கள் அமைத்த குழுவில் இருக்கம் அனைவருக்கும் அந்த தகவலாவது போய் சேர்ந்ததானு பாருங்கள்" என விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk ctr nirmalkumar criticized dmk mkstalin


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->