"அந்த... எதுக்கு உதவும்? டோப்பாவுக்கு தான்" - பொதுக்குழுவில் சி.வி சண்முகம் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகன் "அதிமுக முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியது போல துரோகிகள் என்பவர்கள் உதிர்ந்த ரோமங்கள். அது என்ன உங்களுக்கு கௌரவம் உதிர்ந்த ரோமங்கள். அந்த ரோமங்கள் எதுக்கு உதவும்? டோப்பாவுக்கு தான் உதவும். அந்த டோப்பாவில் தான் ஒட்டிக்கொண்டிருக்கு அந்த ரோமங்கள் எல்லாம்....

தலையே காணோம்... அந்த டோப்பா எங்க நிக்க போகுது... எந்த திமுகவை எதிர்த்து, துரோகி கருணாநிதியை எதிர்த்து, எந்த தீய சக்தியை அழிக்க வேண்டும் என எம்ஜிஆர் கூறினார்களோ அவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு அதிமுகவை அழிக்க பார்க்கின்றார்கள். துரோகிகளையும், எதிரிகளையும் வென்றெடுத்து இயக்கத்தை மீட்டெடுத்தது யார் என்றால் எடப்பாடியார் தான்.

அதிமுகவின் முன்னணி நிர்வாகிகளை, முன்னாள் அமைச்சர்களை சிறைக்கு அனுப்புவோம், இந்த இயக்கம் அழிந்துவிடும் என சொன்னார். எண்ணம் போல் தான் வாழ்க்கை. சிறைக்கு போற வாரம் அவனுக்கு. ஒவ்வொருத்தனும் சிறைக்கு போயிட்டு இருக்கான். கடைசியில தலையும் போகும். ஸ்டாலினும் சிறைக்குச் செல்லும் நேரம் விரைவில் வரும். பெரிய உத்தமன் போல பேசுகிறார். ஊழலை பற்றி பேச ஸ்டாலினுக்கோ திமுகவுக்கோ அருகதை கிடையாது" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk cvshanmugam criticized mkstalin ops


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->