அதிமுக பொதுக்குழு வழக்கு :: அந்த பதவிகளுக்கும் அதிமுகவிற்கும் தொடர்பு இல்லை... உச்சநீதிமன்றத்திலும் அதே பாயிண்ட்..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் விசாரணை நடைபெற்ற வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின் போது இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருப்பதால் கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் விரைவாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

இதனை அடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிவில் வழக்குகள் இன்னும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் தானே உள்ளது..?? பிறகு ஏன் அவசரம்..?? என கேள்வி எழுப்பினர். மேலும் மூன்று சிவில் வழக்குகளும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதா.? ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் யார் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் "சிவில் வழக்குகள் நிலுவையில் தான் உள்ளன. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியதால் பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு கிடையாது. தற்பொழுது அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவி மட்டுமே உள்ளது" என வாதத்தை வைத்துள்ளார். ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்காக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று யாரும் இல்லை என அதிமுக அந்த தலைமை கடிதத்தை திருப்பி அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. அதே பாணியில் இபிஎஸ் தரப்பில் தற்பொழுது வாதத்தினை முன்வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK dose not have post of Coordinator CoCoordinator


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->