விநாயகர் சதுர்த்தி: இந்த சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது - சென்னை உயார்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு  அனுமதி வழங்கக் கூடாது என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது..

மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு பதில் எளிதில் மக்கும் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது..

வழக்கும், பின்னணியும்: 

திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றத்தில், காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூன்று அமைப்புகளை சேர்ந்தவர்கள், மனுதாரர் கேட்ட அதே இடத்தில் சிலை வைக்க அனுமதி கேட்டுள்ளதால், அங்கு சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் தெரிவித்தார். 

மேலும் அந்த இடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் சிலை வைக்க மனுதாரர் அனுமதி கேட்டால் பரிசீலனை செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதி அளித்தார். 

இந்த வாழ்க்கை விசாரணை செய்த நீதிபதிகள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் சிலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. மக்கக் கூடிய சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vinayagar Chaturthi Plasterofparis statue ban Chennai HC


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->