தவெக மாநாடு அனுமதி வேண்டுமா? மொத்தம் 21 கேள்வி? பொதுச்செயலாளருக்கு பறந்த கடிதம்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ள நிலையில், 21 கேள்விகள் அடங்கிய கடிதத்தை, கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்திற்கு டிஎஸ்பி பார்த்திபன் அனுப்பி வைத்துள்ளார். 

கடந்த ஆறு தினங்களுக்கு முன்பு விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் எஸ்பி ஆகியோரிடம் மனு அளித்திருந்தனர். 

அந்த மனுவில், விக்கிரவாண்டி பகுதியில் 85 ஏக்கர் நிலம் மாநாடு நடத்துவதற்காக குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன்ம்,  தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்திற்கு, 21 கேள்விகள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், இந்த மாநாடு நடத்துவதற்கு என்ன ஏற்பாடுகள் நீங்கள் செய்துள்ளீர்கள்? மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? 

எந்தெந்த பகுதிகளில் இருந்து, எவ்வளவு பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வருகிறார்கள்? அவர்களுக்காக எவ்வளவு இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது?

பாதுகாப்பு அரண், பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள மேடையின் நீளம், அகலம் எவ்வளவு? மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை எவ்வளவு? என மொத்தம் 21 கேள்விகளை அந்த கடிதத்தில் கேட்டு, அதற்கு பதில் அளிக்க தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Maanadu Vikkiravandi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->