ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய இன்ஸ்பெக்டர்.!
police officer arrested harassment in saithapetai
சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள இரண்டாவது நடை மேடையில் கல்லூரி மாணவி ஒருவர் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த சைதாப்பேட்டை காவல் நிலையத்தின் தலைமை காவலர் கமலக்கண்ணன் என்பவர் நண்பருடன் இருந்த இளம்பெண்ணிடம் தவறாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் ஒன்று கூடியதால் போலீஸ்காரர் அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து இளம்பெண் மாம்பலம் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் விசாரணை நடத்தியதில் காவலர் கமலக்கண்ணன், இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கமலக்கண்ணன் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், அவரை கைது செய்ய தலைமை காவலர் வைரவன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பாலியல் புகாரில் சிக்கிய போலீஸ்காரர் கமலக்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police officer arrested harassment in saithapetai