மாஸ்டர் பிளான் போட்ட எடப்பாடி பழனிச்சாமி! இது வேற ரகமா இருக்கே! அதிமுகவினருக்கு நல்ல செய்தி! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இருக்கும்போதே பல இடைத்தேர்தல்களை சந்திக்காமல் புறக்கணித்து உள்ளார். பின்னர் அவரே தனது இறுதி காலத்தில் இனி எந்த இடைத்தேர்தலையும் புறக்கணிக்க போவதில்லை என்று அறிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். 

கடந்த முறை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக தோல்வி அடைந்த நிலையில், அந்த தேர்தலின் போது திமுக மக்களை ஆடு மாடுகளை போல பட்டியில் அடைத்து, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி இருந்தார்.

தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மட்டும் எப்படி நியாயமாக நடக்கும்? ஜனநாயக ரீதியாக மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது என்பதால் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்தும், வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தல் குறித்தும் பல்வேறு விஷயங்களை தெரிவித்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு: ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி திமுக இந்த இடைத்தேர்தலிலும் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாது. இந்த தேர்தலும் சுதந்திரமாக நடைபெறாது என்பதால் தான் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. 

வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெல்லும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அவரின் கனவு பலிக்க போவதில்லை. 

சட்டமன்ற பொது தேர்தல் என்பது வேறு, பாராளுமன்ற பொது தேர்தல் என்பது வேறு, மக்கள் இதனைப் பிரித்துப் பார்த்துதான் வாக்களிப்பார்கள். தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், மாநிலத்தில் யார் வரவேண்டும் என்று சிந்தித்துப் பார்த்தே வாக்களிப்பார்கள். 

அந்த வகையில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். எங்களுடைய இலக்கு 2026 மட்டும்தான் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, தங்களது கூட்டணியின் முதல் வெற்றியாக பதிவு செய்ய பாஜக-பாமக கூட்டணி களத்தில் இறங்கி பணியாற்ற தொடங்கியுள்ள நிலையில், அதிமுக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலையே டார்கெட் ஆக வைத்து களம் இறங்கியுள்ளது எடப்பாடி பழனிச்சாமியின் பேட்டி மூலம் உறுதியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Edappadi k Palanisamy Master plan for Election 2026


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->