அதிமுக பொதுக்குழு வழக்கு! ஓபிஎஸ், இபிஎஸ்.,க்கு 10 நாள் அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த, ஓ பன்னீர்செல்வத்தின் வழக்கு, வருகின்ற ஜூன் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்த மேல்மறையீட்டு வழக்கு விசாரணை, கடந்த வாரம் முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த விசாரணையின் போது, அதிமுக தரப்பு வழக்கறிஞர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் தங்களது வாதத்தை முன்வைத்தனர்.

அதில், பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் இருப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச் செயலாளர் தேர்வு அனைத்துமே கட்சிகளின் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களை நீக்கக்கூடிய அதிகாரம் அதிமுகவின் பொது குழுவுக்கு உள்ளதாக வாதம் செய்யப்பட்டது.

இன்று ஓபிஎஸ் தரப்பு வாதத்திற்காக வழக்கு விசாரணை மீண்டும் வந்த போது, ஒபிஎஸ் அணியின் இறுதி பதில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதாகவும், எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் 10 நாட்கள் அவகாசம் வழங்கியும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஜூன் 28ம் தேதிக்கு இந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK EPS OPS Chennai HC Case 15 june 2023


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->