உங்க வித்தை எடுபடாது... திட்டமிட்டபடி நாளை நடக்கும் - அதிமுக தரப்பில் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை உள்நோக்கத்தோடு முடக்க முயற்சிக்கும் தமிழக அரசைக் கண்டித்து நாளை திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என்று, அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், "கள்ளர் சீரமைப்பு பள்ளி மற்றும் விடுதிகளை பள்ளிகல்வித்துறையோடு இணைக்கும் முயற்சியின் முதல் படியாக இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அவர்களின் தனித்துவமான கட்டுப்பாட்டில் இயங்கி வந்த கள்ளர் சீரமைப்பு விடுதிகளை கள்ளர் சீரமைப்புத் துறையின் நிர்வாகத்திலிருந்து விடுவித்து, அதன் அதிகாரத்தை மழுங்கடிக்கும் வகையில் வெளியிடப்பட்ட விடியா அரசின் அரசாணை 40/2022- ஐ கைவிட வலியுறுத்தியும் நாளை (24.08.2024) மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாக மூன்று நாட்களுக்கு முன்பே (20.08.2024) அறிவித்திருந்த நிலையில், விடியா திமுக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இன்று (23.08.2024) வெளியிடப்பட்டுள்ள விளக்கக் குறிப்பில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையோடு இணைக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடியா அரசின் சூழ்ச்சிகளை அறிந்து, பாதிக்கப்படும் அச்சத்தில் உள்ள மக்களின் பக்கம் நிற்பதை உள்நோக்கம் கற்பிக்கும் விதத்தில் விடியா திமுக அரசு சித்தரிக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.

அஇஅதிமுக-வுடன் அனைத்து சமுதாய அமைப்புகளும், தோழமைக் கட்சிகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டமாக வலுப்பெறும் என்பதை உளவுத்துறை முலம் அறிந்ததால் , வழக்கம் போல மாற்றி மாற்றிப் பேசி தன் நிர்வாக குளறுபடிகளை மறைக்க முயலும் விடியா திமுக அரசின் வித்தைகள் அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது. 

நாணய வெளியீட்டு விழாவை "மத்திய அரசு நடத்தியது" என்று பச்சைப்பொய் பேசிவிட்டு, தன்னுடைய பொய் அம்பலப்பட்டுவிட்டதும் "மத்திய அரசு கட்டுப்பாட்டில் நிகழ்ச்சியை மாநில அரசு தான் நடத்தியது" என மாற்றிப் பேசி சமாளிக்க முயன்ற முக ஸ்டாலின் தலைமையிலான விடியா அரசு வெளியிடும் வெற்று அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் மக்களும் அஇஅதிமுக-வும் நம்புவதாக இல்லை.

விடியா திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்த செய்திகளால் அச்சத்தில் உள்ளதாக கள்ளர் சமுதாய அமைப்பினர் மற்றும் மக்கள் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டதன் அடிப்படையிலேயே, அதிமுகவின் மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு உரிய மதிப்பளித்து இப்போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

இப்பிரச்சனைக்கு மூலக்காரணமாகக் கருதப்படும் "இணை இயக்குநரால் (கள்ளர் சீரமைப்பு) மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகளான விடுதிகளின் நிர்வாகம், அன்றாட பணிகளை மேற்பார்வையிடுதல், ஆய்வுகள் மேற்கொள்ளுதல் போன்றவற்றை மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு மாற்றம் செய்து", அதன் மூலம் இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து கள்ளர் சீரமைப்பு விடுதிகளைப் பறித்து, கள்ளர் சீரமைப்புத் துறையின் அதிகாரத்தை மழுங்கடிப்பதன் மூலம், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை முடக்க முயற்சிக்கும் 30.5.2022 அன்று விடியா திமுக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண் 40-ஐ ரத்து செய்வதும், கள்ளர் சமுதாய அமைப்பினர் மற்றும் மக்களின் அச்சத்தை விலக்கும் வண்ணம், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாக முறை எந்த அறிக்கையின் அடிப்படையிலும் மாற்றம் எதுவும் செய்யப்படாது என்பதை வெற்று அறிக்கையாக இல்லமால் உணர்வுபூர்மான நடவடிக்கைகள் மட்டுமே  நிரந்தர தீர்வை உருவாக்கும் . 

மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமுதாயங்களுள் ஒன்றான பிரமலைக் கள்ளர் சமுதாயத்தின் வரலாற்று ரீதியான கல்வி அடையாளமாகத் திகழும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை முடக்க விடியா திமுக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் முறியடிக்கும் வரை அதிமுகவின் போராட்டம் நிச்சயம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK fasting protest in madurai for Kallar school issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->