அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கைது! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில், ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்து இருந்தது. ஆனால் போராட்டத்திற்கு போலீசார் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி அதிமுக எம்எல்ஏ.,க்கள் போராட்டம் நடத்தினர்.

அதிமுக எம்எல்ஏ.,களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத நிலையில், தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏ.,க்களை போலீசார் கைது செய்தனர். என்ன கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ராசிபுரம் பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கைது செய்த போலீசார் பேருந்து மூலம் அழைத்துச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.

இதேபோன்று சிவகாசி பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் ஈடுபட்ட முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK former ministers arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->