அதிமுக பொதுக்குழு வழக்கு! அனல் பறந்த வாதம்! அடுத்தகட்ட விசாரணை எப்பபோது?!  - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த, ஓ பன்னீர்செல்வத்தின் வழக்கு, வருகின்ற ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்த மேல்மறையீட்டு வழக்கு விசாரணை, நேற்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஏற்கனவே, ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் மற்றும் அதிமுக தரப்பு வழக்கறிஞர் தங்களது வாதத்தை முன்வைத்தனர்.

அதில், பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் இருப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச் செயலாளர் தேர்வு அனைத்துமே கட்சிகளின் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

மேலும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களை நீக்கக்கூடிய அதிகாரம் அதிமுகவின் பொது குழுவுக்கு உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார். 

இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, கட்சியின் அனைத்து விதிகளும் மாறுதலுக்கு உட்பட்டது என்கின்ற வாதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு முன் வைத்தது.

மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை களைத்து அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு பிறகு தான், ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த வழக்கை வருகின்ற ஜூன் 12-ம் தேதி ஒத்திவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK GS Case 12 june 2023 Edappadi Palanisami O Panneerselvam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->