BigBreaking | அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு!  - Seithipunal
Seithipunal


கடந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், பொது குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிட்டு நிவாரணம் பெற்றுக் கொள்ளுமாறு பன்னீர்செல்வத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி அதிமுக பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக் கோரியம், பொதுச்செயலாளர் பதவி தேர்தலை தடை செய்ய கோரியும் பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஜே சி டி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை அவசர வழக்காக கடந்த 22ஆம் தேதி விசாரணை செய்த நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

அதே சமயத்தில் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தங்களது வாதத்தை எழுத்துப்பூர்வமாக கடந்த 24 ஆம் தேதி தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK GS case judgement dat march 28


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->