களத்தில் குதித்த அதிமுக.. "பூத் வாரியாக வாட்ஸ் அப் குழு".. சூடு பிடிக்கும் தேர்தல் பணி..!! - Seithipunal
Seithipunal


அதிமுக அரசின் சாதனைகள், திமுக அரசின் மக்கள் விரோத போக்கை களத்திற்கு கொண்டு செல்ல வாட்ஸ் அப் குழுக்கள்..!!

 அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது முதற்கட்ட பணிகளை தொடங்கிவிட்டன. அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்ற அறிவிப்பினை முதன்முதலாக அறிவித்தார். அதிமுக தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயத்துள்ளது.

இந்த நிலையில் அதிமுக கட்சி நடவடிக்கைகள், கட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் வாட்ஸ் அப் குழுக்களை அமைக்கும் பணியை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துவங்கியுள்ளது. இந்த தகவலை சென்னை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் செய்தி தொடர்பான கோவை சத்யன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர் "அதிமுக ஆட்சியில் இருக்கும் போது இப்பணியை துவங்கினோம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தொய்வு ஏற்பட்டது. தற்பொழுது நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு தயாராகும் வகையில் வாட்ஸ் அப் குழுக்கள் அமைக்கும் பணியை தீவிர படுத்தியுள்ளோம்.

சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட 17 மாவட்டங்களில் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகர், பகுதி, வட்டம், நகராட்சி, வார்டு, ஊரகப்பகுதி, நகரம், ஒன்றியம், கிளை வாரியாக வாட்ஸ் அப் குழுக்களை அமைத்து வருகிறோம்.

அடுத்த கட்டமாக பூத் வாரியாகவும் வாட்ஸ் அப் குழுக்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதிமுக சார்பில் நடத்தப்படும் கட்சி நிகழ்ச்சிகள் தலைவர்கள் அறிக்கை அதிமுக அரசின் சாதனைகள் போன்றவற்றையும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கையும் மக்களிடையே கொண்டு செல்வதற்காக இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK IT wing create booth wise WhatsApp group


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->