அதிமுகவின் முக்கிய தலைவர் கைது! பின்னணியில் அமைச்சர் செந்தில்பாலாஜி - அதிமுக கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஐடி விங்க் துணை தலைவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக அரசு நடந்து கொள்வதாக அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுகவின் ஐடி விங்க் அதிகாரபூர்வ பக்கத்தில், "ஈரோடு மண்டல கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவர் பசுபதி செந்தில் அவர்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு புனையப்பட்ட வழக்கில் விடியா திமுக அரசு கைது செய்திருப்பதற்கு கடும் கண்டனம்.

ஆட்சியை வைத்து மக்களுக்கு நல்லது செய்வதற்கு திராணியில்லாத திமுக அரசு, எதிர்க்கட்சியான அஇஅதிமுக-வை பழி வாங்கவும், சிறையில் இருந்து ஜாமினில் வந்து, மீண்டும் சிறைவாசல் அழைத்துக்கொண்டிருக்கும் "தியாகி பாலாஜி"யை திருப்திப் படுத்தவும் மட்டுமே அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது கண்டனத்திற்குரியது.

அதிகார விளங்குகளைக் கொண்டு மக்களுக்கான குரலை எப்போதும் அடக்க முடியாது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk it wING pASUPATHY sENTHIL aRREST DMK SENTHILBALAJI


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->