அதிமுகவின் முக்கிய நிர்வாகி சாலை விபத்தில் அகால மரணம்!
AIADMK IT Wing person death in road accident
அதிமுகவின் சேலம் மாநகர் மாவட்டக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் கொண்டலாம்பட்டி பகுதி 2 செயலாளர் S செந்தில்குமாரன் பிள்ளை எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து அதிமுக தரப்பில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், செந்தில்குமாரன் பிள்ளை எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், கழகத்தினருக்கும் அதிமுக ஐடி விங்க் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
வாகன ஓட்டிகள், குறிப்பாக இளைஞர்கள், சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி, மிகுந்த பாதுகாப்புடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
AIADMK IT Wing person death in road accident