உதயநிதியின் முடி சூட்டு விழாவிற்கு மட்டும் ஆளுநர் தேவையா..?! திமுகவை பஞ்சர் ஆக்கிய ஜெயக்குமார்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் ஆகிய அதிமுக நிறுவனருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு தினம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. என் காரணமாக அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அனுமதி வழங்க கோரி அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காவல் நிலைய ஆணையரிடம் மனு அளித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அப்பொழுது பேசிய அவர் "கழகமே குடும்பம் என்று போய் இப்பொழுது குடும்பமே கழகம் என்ற நிலைக்கு திமுக வந்துவிட்டது. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்பதால் திமுக எனும் குடும்ப கழகத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக (HR) உதயநிதி ஸ்டாலின் செயல்படுவார். எதற்கு எடுத்தாலும் தமிழ்நாட்டிற்கு கவர்னர் தேவையில்லை என்று சொல்லும் திமுக பட்டத்து இளவரசருக்கு முடி சூட்ட மட்டும் கவர்னர் தேவைப்படுகிறாரா..?

உதயநிதி ஸ்டாலினுக்கு முடி சூட்டுவதனால் திமுக ஒரு முடிந்த சகாப்தமாகவே கருதப்படும். அதன் பிறகு அவருடைய வாரிசாக யாரை கொண்டு வந்தாலும் அதோடு திமுகவை கதை முடிந்து விடும். திமுகவில் கட்சிக்காக தியாகம் செய்தோர் எத்தனையோ பேர் உள்ளனர். ஆனால் வாழையடி வாழையாக கருணாநிதி குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டும் அரச பதவிக்கு வர பட்டத்து இளவரசராக உதயநிதியை கொண்டு வர வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு நனவாகியுள்ளது

இதனால் தமிழகத்தில் தேனும் பாலும் ஆறாக ஓடப்போவதில்லை. தமிழ்நாடு ஒன்றும் அமெரிக்கா போன்று ஆகப்போவதில்லை. தமிழகத்தில் ஒன்றும் நடக்கப் போவதில்லை. இன்று திமுக அரசை வழிநடத்துவது எங்கள் கட்சியால் மக்களுக்கு அடையாளம் காணப்பட்டு, எங்கள் கட்சியால் வளர்ந்த எட்டு பேர் மட்டுமே ஆட்சியை நடத்துகின்றனர். 

இதன் காரணமாக திமுகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகளுக்கு மனக்கஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று தற்பொழுது உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக கொண்டு வந்ததற்கு மூத்த அமைச்சர்கள் வருத்தத்தில் உள்ளனர். அவர்களால் வெளியே சொல்ல முடியவில்லை. திமுகவிற்காக காலம் காலமாக உழைத்த எத்தனையோ மூத்த நிர்வாகிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாமல் உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது" என ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Jayakumar criticized Udhayanidhi appoints as minister


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->